எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோரும் திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட பல முக்கிய தீர்மானங்கள் குறித்து ஆலோசிப்பதற்காக தேர்தல் ஆணைக்குழு இன்று காலை 10 மணிக்கு கூடவுள்ளதுஎன தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்
இதேவேளை, பொலிஸ் மா அதிபர், பாதுகாப்பு அமைச்சின் உயர் அதிகாரிகள், தபால் மா அதிபர், அரச அச்சகர் உள்ளிட்ட அதிகாரிகள் இன்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகவே இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் மார்ச் 10ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கோருவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை எதிர்வரும் 05ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.
தேர்தலில் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பெயர்களை எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதிக்கு முன்னர் வர்த்தமானி மூலம் அறிவிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.