follow the truth

follow the truth

November, 23, 2024
Homeஉள்நாடுமின்கட்டணத்தில் 10 கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞன் கைது

மின்கட்டணத்தில் 10 கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞன் கைது

Published on

மின்கட்டணம் செலுத்துவதாக கூறி சுமார் 10 கோடி ரூபாய் மோசடி செய்த இளைஞரை பொலிஸார் கைது செய்தனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் படி, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெசினோ விளையாட்டுகளுக்கு அதிக அடிமையாக இருந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் கொழும்பில் உள்ள பிரபல கிளப் ஒன்றிற்கு அருகில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணையின் போது இராணுவ விசேட அதிரடிப்படையில் இருந்து தப்பிச் சென்றவர் என தெரியவந்துள்ளது.

மேலும் கெசினோ கிளப்களுக்கு வருகை தரும் வர்த்தகர்களின் மின் கட்டணத்தை செலுத்துவதாக கூறி குறித்த இளைஞன் ஏமாற்றி வந்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இலட்சக்கணக்கான ரூபாய் மின்சாரக் கட்டண பட்டியல் பெற்றவர்கள் குறிப்பிட்ட கைப்பேசி செயலி மூலம் செலுத்தினால் 20% தள்ளுபடி பெற்றுக் கொள்ளலாம் என கூறி நபரொருவர் மோசடியில் ஈடுபடுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கிடைத்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. .

சந்தேகநபரான இளைஞன் பணம் பெற்று மின்சார கட்டணத்தை இணையத்தின் ஊடாக செலுத்தியதாக உறுதிப்படுத்துவதற்காக இணையத்தின் ஊடாக மின்சார சபையின் கட்டணங்களை செலுத்தும் மூன்றாம் தரப்பு நிறுவனத்தின் கணக்கை ஹேக் செய்துள்ளார்.

மின்சார சபையின் தரவுகளில் கட்டணம் செலுத்தப்பட்டதாக புதுப்பிக்கப்பட்டாலும், அதற்கு பணம் செலுத்தப்படுவதில்லை என விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இணையதளங்களை ஹேக் செய்வது எப்படி என்பதை அவரே கற்றுக்கொண்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தான் ஒரு கோடியே 60 இலட்சம் ரூபாவிற்கு மேல் மோசடி செய்துள்ளதாகவும், அந்தப் பணத்தில் கெசினோ விளையாட்டில் ஈடுபட்டதாகவும் அவர் ஒப்புக்கொண்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவின் சமூக ஊடக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபருடன் தொடர்புடைய மேலும் பல தரகர்களைக் கைது செய்யும் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் அரசாங்கத்தை உருவாக்க அரச ஊழியர்கள் அர்ப்பணிக்க வேண்டும்

மக்கள் ஆணைக்கும் பொது மக்கள் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புக்களை தற்போதைய அரசாங்கம் நிறைவேற்றத் தவறினால் நம்பிக்கையான எதிர்கால தொடர்பில் மக்கள்...

பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்க்க வேலைத்திட்டம்

குறைந்த தரத்தில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக அவசர வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற...

சீன அரசாங்கத்தின் 1996 வீட்டுத் திட்டம் ஒப்பந்தம் கைச்சாத்து

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை மேம்படுத்தும் நோக்கில் சீன அரசாங்கத்தின் நிதியுதவியில் வீட்டுத்திட்டத்தின் இணை ஒப்பந்தம்...