follow the truth

follow the truth

April, 11, 2025
HomeTOP3"அறிவார்ந்த மக்களுக்கு சிறைச்சாலை ஒரு நல்ல பல்கலைக்கழகம்"

“அறிவார்ந்த மக்களுக்கு சிறைச்சாலை ஒரு நல்ல பல்கலைக்கழகம்”

Published on

“நான் நன்றாக இருந்தேன், சிறைக்குள் ஓய்வெடுத்தேன். நடந்த சம்பவங்களால் எனது எதிர்காலம் பாதிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை” என்று திலினி ப்ரியமாலி தெரிவித்திருந்தார்.

சிறையிலிருந்து விடுதலையான பின்னர் நேற்று (27) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவிக்கையில், அவர் மேலும் கூறியதாவது:

“நான் நலமாக உள்ளேன். சிறைக்குள் மிகவும் நிம்மதியாக இருந்தேன். எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது எப்படி என்று தெரியவில்லை. இது அறிவிக்கப்பட்ட அளவுக்கு தீவிரமானது அல்ல. சிறைச்சாலையில் நான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோது என்ன நடந்தது என்பது ஊடகங்களில் வெளியிடப்பட்டதைப் போல தீவிரமானது அல்ல.

பேசி தீர்த்துக்கொள்ளக்கூடிய பிரச்சினைகள் அவை. நான் ஏன் இவ்வளவு பிரபலமானேன் என்று எனக்குத் தெரியவில்லை. இவை இரண்டரை மாதங்களாக ஊடகங்களில் வெளிவந்தன. நான் செய்தவை, செய்யாதவை எல்லாம் ஊடகங்கள் மூலம் செய்திகள் வெளியாகின. எனக்கு ஒரு பெரிய அநியாயம் நடந்தது. என்னுடன் பழகியவர்கள் என் மீது கோபமாக இருந்தால், அவர்கள் எனக்கு நல்லது சொல்ல மாட்டார்கள். எனது எதிர்காலம் பாதிக்கப்படவில்லை என்று நினைக்கிறேன். நிறைய அனுபவம் கிடைத்தது.

ஒரு நபராக, அனுபவம் எனது அறிவை அதிகரித்தது. அறிவார்ந்த மக்களுக்கு இது ஒரு நல்ல பல்கலைக்கழகம்” என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கிளீன் ஸ்ரீலங்கா திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் "கிளீன் ஸ்ரீலங்கா" திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு...

தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை

சுற்றுலாக் கைத்தொழிலுடன் சம்பந்தப்பட்ட பல்வேறு நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய சுற்றுலா ஆணைக்குழுவொன்றை தாபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாப்...

இராஜகிரியவில் 22 இந்திய பிரஜைகள் கைது

காலாவதியான விசாக்களுடன் இருந்த 22 இந்திய பிரஜைகள் இன்று(10) குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள்...