follow the truth

follow the truth

April, 18, 2025
Homeவிளையாட்டுஇலங்கைக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணி

இலங்கைக்கு எதிரான போட்டிக்கான இந்திய அணி

Published on

இலங்கையுடன் நடைபெறவுள்ள வரையறுக்கப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டியின் டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்தும் பொறுப்பு சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் பங்கேற்கும் டி20 மற்றும் ஒருநாள் அணிகள் நேற்று (27) இரவு பெயரிடப்பட்டது. டி20 தொடரில் அனுபவ வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எல். ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, தாக்குதல் பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கு விக்கெட் கீப்பர் வீரர் ரிஷப் பந்த் அணியில் இருந்து நீக்கப்பட்டு அதற்கு பதிலாக தாக்குதல் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

டி20 அணியில் ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், உம்ரான் மாலிக், சிவம் மாவா, முகேஷ் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இருப்பினும், விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் சேர்க்கப்பட்டு, தொடக்க வீரர் ஷிகர் தவான் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் அணியில் இடம் பெறவில்லை. இந்தப் போட்டிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் உள்ளனர்.

3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடர் மும்பையில் ஜனவரி 3ம் திகதி தொடங்குகிறது. அதன் பிறகு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஜனவரி 10ம் திகதி தொடங்குகிறது.

இருபதுக்கு 20 போட்டியில் பங்கேற்கும் இந்திய அணி

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மான் கில், சூர்யகுமார் யாதவ் (துணை கேப்டன்), தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சஹால், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், ஹர்சல் படேல், உம்ரான் மாலிக். சிவம் மாவி, முகேஷ் குமார்

ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா (துணை கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அக்சர் படேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதுகின்றன

இந்தியன் ப்ரீமியர் லீக் 34வது போட்டி இன்று (18) நடைபெறவுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள்...

குஜராத் டைட்டன்ஸ் அணியில் இணைந்த தசுன் ஷானக

நடந்து வரும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் போட்டியின் போது காயமடைந்த குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர்...

உஷாராக இருக்க ஐபிஎல் அணிகள், வீரர்களுக்கு பிசிசிஐ எச்சரிக்கை

உலக அளவில் நடைபெறும் டி20 லீக்கில் சிறப்பு வாய்ந்ததாக இந்தியன் பிரீமியர் லீக் (IPL) விளங்குகிறது. இதில் ஏராளமான சர்வதேச...