எதிர்வரும் தினங்களில் ஊரடங்கு தளர்த்தப்பட்டால், பொதுமக்கள் எவ்வாறு கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து புதிய சுகாதார வழிகாட்டல்களை வெளியிட எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, புதிய சுகாதார வழிகாட்டல்கள் தற்போது தயாரிக்கப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை கூடவுள்ள கொவிட் செயலணிக் கூட்டத்தில், நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு தொடர்பிலான இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.