follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉள்நாடுகொலையா? தற்கொலையா? தொடரும் மர்மம்

கொலையா? தற்கொலையா? தொடரும் மர்மம்

Published on

ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பான குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணை புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவர் தற்கொலை செய்தாரா என்ற கோணத்திலும் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஜனசக்தி இயக்குநரின் மரணம் தாம் முன்னர் சந்தேகித்த நபர்களால் அல்ல, வேறு சில சம்பவங்களால் ஏற்பட்டிருக்கலாம் என குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

முன்னதாக கொலையாளி என்று சிஐடி வலுவாக சந்தேகித்த ஷாஃப்டரின் நெருங்கிய கூட்டாளி, கொலையில் பிரதான சந்தேக நபராக கருதப்பட மாட்டார் என புதிய ஆதாரங்கள் தெரிவிக்கின்றன என்று சிஐடி வட்டாரங்கள் கூறுகின்றன.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் விசேட குழுவொன்று நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை கொழும்பு 7, மலர் வீதியில் ஷாஃப்டர் வசித்து வந்த வீட்டிற்குச் சென்று சோதனை நடத்தியது. விசாரணைக் குழுக்களின் தகவல்களின்படி, ஷாஃப்டரின் கழுத்தை நெரிக்கப் பயன்படுத்தப்பட்ட மீதமுள்ள ஆன்டெனா வயர் மற்றும் ஷாஃப்டரின் கைகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்டதைப் போன்ற சில கேபிள் இணைப்புகள் அந்த வீட்டில் கண்டுபிடிக்கப்பட்டன. ஷாஃப்டரின் தாயின் தொலைக்காட்சிக்கு ஆண்டெனா கம்பி பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

தினேஷ் ஷாஃப்டரின் அறையில் உள்ள மேசை டிராயரில் சுமார் 08 கேபிள் இணைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஷாஃப்டரின் பிரேதப் பரிசோதனையை மேற்கொண்ட மருத்துவர்களிடம், ஷாஃப்டர் இறந்த விதம் குறித்த புதிய சந்தேகங்கள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை கேட்டுள்ளதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. அதாவது அவர் தற்கொலை செய்தாரா என்ற கோணத்தில் விசாரிக்கிறார்கள்.

ஆனால் இது சம்பந்தமாக மருத்துவரின் கருத்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை. சிஐடியினர் குறிப்பிட்ட நிகழ்வு சாத்தியமாக இருப்பதற்கும் அல்லது சாத்தியமற்றதாக இருப்பதற்கும் வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறியுளள்னர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தற்போது தனது புதிய கோட்பாட்டை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களைத் திரட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பொரளை பொது மயானம் தினேஷ் ஷாஃப்டருக்கு அறிமுகமில்லாத இடமல்ல என்பது தெளிவாக தெரியவந்துள்ளது.

பொரளை பொது மயானம் அவருக்கு அறிமுகமில்லாத இடமாக இருந்திருந்தால், அவர் காரை நிறுத்திய இடத்தில் நிறுத்த மாட்டார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தினேஷ் ஷாஃப்டர் பிற்பகல் 2.06 மணியளவில் தனது வீட்டை விட்டு வெளியேறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. அன்றைய தினம் கொழும்பு 7, மலலசேகர மாவத்தையில் அமைந்துள்ள சிற்றுண்டிக் கடையொன்றில் இருவருக்குத் தேவையான சிற்றுண்டிகளை வாங்கிச் சென்றுள்ளார்.

பிரேத பரிசோதனையில் அவர் அந்த உணவை உட்கொண்டமை உறுதிப்படுத்தப்பட்டது. தினேஷ் ஷாஃப்டரின் கைகளைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட கேபிள் டை இந்த நாட்டில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் வகை அல்ல என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மயானத்தில் பணிபுரியும் சிறு ஊழியர் ஒருவர், ஷாஃப்ட்டர் இருந்த காரின் அருகே ஒருவர் நடந்து செல்வதை பார்த்துள்ளார்.

அந்த நபரின் அடையாளம் தெரியவில்லை. இதேவேளை, ஷாஃப்ட்டர் இலட்சக்கணக்கான ரூபாவை வர்த்தக நடவடிக்கைகளில் முதலீடு செய்துள்ளதாகவும், ஆனால் எதிர்பார்த்தபடி பணத்தை மீளப்பெற முடியாமல் நாளுக்கு நாள் அவரது வர்த்தகம் நஷ்டத்தை சந்தித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

நுவரெலியா பிரதேசத்தில் சுமார் ரூ.3000 மில்லியன் மதிப்புள்ள நிலம் வாங்கியுள்ளார். எனினும், அது மாகாண வீதி அபிவிருத்தி அதிகாரசபை கையகப்படுத்தியுள்ளது.

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வியாபாரத்தில் முதலீடு செய்த ரூ.850 மில்லியன் ரூபாயும் நஷ்டமடைந்துள்ளதாகவும், கிரிக்கெட் வர்ணனையாளர் பிரையன் தோமஸுக்கு வழங்கப்பட்ட 1,400 மில்லியன் ரூபா தொடர்பான தகராறு, உள்ளடங்களாக தோல்வியுற்ற வணிக பரிவர்த்தனைகள் காரணமாக அவர் சுமார் ரூ.20,000 மில்லியனை இழந்துள்ளதாக குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ஷாஃப்டர் தனது மனைவியின் தாயாருக்கு எழுதிய கடிதத்தில், “இத்தகைய நல்ல மகளை வளர்த்ததற்கு மிக்க நன்றி” போன்ற உணர்ச்சிகரமான கருத்துக்களைக் கொண்ட கடிதத்தின் மீதும் புலனாய்வாளர்கள் கவனம் செலுத்தியுள்ளனர்.

கொலைக்கான காரணம், எந்த வகையில் மேற்கொள்ளப்பட்டது, எதிர்பார்ப்பு என்ன, திட்டம் போன்ற விடயங்கள் தொடர்பில் புலனாய்வாளர்கள் கவனம் செலுத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார். இதுவரை 75 பேரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தல்துவ தெரிவித்தார்.

விசாரணைக்கு உட்படுத்தப்பட்டவர்களில் குடும்ப உறுப்பினர்களும் அடங்குவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தினேஷ் ஷாஃப்டரின் இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் விசாரிக்கப்பட்டவர்களில் அடங்குவர். தினேஷ் ஷாஃப்டரின் சொத்துக்கள் மற்றும் வர்த்தக பரிவர்த்தனைகள் குறித்தும் அவர்களிடம் கேட்கப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷாஃப்டரின் வீடு மற்றும் பிற இடங்களில் உள்ள பாதுகாப்பு கமரா காட்சிகள் புலனாய்வாளர்களுக்கு பெரிதும் உதவுவதாகவும் தல்துவ கூறினார். இக்குற்றம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில், தினேஷ் ஷாஃப்டரின் தொலைபேசி இலக்கத்திற்கு மேலதிகமாக, தினேஷ் ஷாஃப்டரை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்ல உதவிய மயானத் தொழிலாளி, அவரது மனைவி, தினேஷ் ஷாஃப்டரின் நண்பரும் பணியாளருமான கே. பெரேரா, தினேஷ் ஷாஃப்டரின் அலுவலக உதவியாளரின் கையடக்க தொலைபேசிகள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...

ட்ரம்பின் பரஸ்பர வரி : அமெரிக்கா பறந்தது இலங்கை தூதுக்குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு...