தற்போது நிலவும் கடும் மழை காரணமாக நாட்டின் நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கண்டி, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இந்த அபாயம் ஏற்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசங்களின் மலைப்பாங்கான மற்றும் சரிவான பிரதேசங்களில் வாழும் மக்கள் மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்படாதவாறு அவதானமாக இருக்குமாறும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, கண்டி – அக்குறணை – துனுவில பிரதேசத்தில் வீடொன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதர சகோதரிகள் உயிரிழந்துள்ளனர்.
கடும் மழை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் 18 மற்றும் 19 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளதாக கண்டி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.