கடந்த ஆண்டுடன் (2021) ஒப்பிடும்போது 1 வயதுக்குட்பட்ட குழந்தைகள், மற்றும் 1 முதல் 5 வயது வரையிலான சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சின் குடும்ப சுகாதார பணியகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
நாட்டின் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 42.9 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் பிள்ளைக்கான பால்மா மற்றும் பிஸ்கட் வகைகளின் விலைகள் அச்சுறுத்தும் வகையில் அதிகரித்துள்ளன. அதனால் அவற்றினை போதுமான அளவு குழந்தைக்கு வழங்க முடியவில்லை என பெற்றோர் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது