பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ரமீஸ் ராஜா உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிராக சொந்த நாட்டில் நடந்த டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் ஒயிட்வாஷ் செய்யப்பட்ட பிறகு இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த 3 போட்டிகள் கொண்ட தொடரில் பாகிஸ்தானை 3-0 என்ற கணக்கில் வீழ்த்தியதன் மூலம், ரமீஸ் ராஜா தனது இடத்தை இழந்துள்ளார். ரமிஸ் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவராக 3 வருட காலத்திற்கு பொறுப்பேற்றார்.
இருப்பினும், அவரது தலைமையின் கீழ், பாகிஸ்தான் ஆசிய இருபதுக்கு 20 கிண்ணம் மற்றும் உலக இருபதுக்கு 20 தொடரில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
இதேவேளை, ரமிஸால் காலியாகவுள்ள பாகிஸ்தான் கிரிக்கட் தலைவர் பதவிக்கு 73 வயதான நஜாம் சேத்தி, முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.