வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் பூரண தடுப்பூசி பெற்றவர்கள் இலங்கை வருவதற்கு முன்னதாக செய்துகொண்ட பிசிஆர் பரிசோதனைகளில் தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டிருந்தால் அவர்களுக்கு இலங்கை விமான நிலையங்களில் பிசிஆர் பரிசோதனையின்றி வெளியேற அனுமதி வழங்கப்படும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த நடைமுறை அமுல்படுத்தப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.