தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (20) கூடவுள்ளது.
ஆணைக்குழுவின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடும் நோக்கில் இந்தச் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.
இதனிடையே, உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பான வேட்புமனு அறிவிப்பு டிசம்பர் கடைசி வாரத்தில் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு அண்மையில் அறிவித்தது.