ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு புண்ணியமாகட்டும், நாட்டில் இருந்த எரிபொருள் வரிசை தற்போது இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
“… இந்நாட்களில் எம்மை சந்திக்கும், அல்லது நாம் சந்திக்கும் மக்கள் பொய்யான புன்னகையுடன் எம்மை ஆதரிக்க முயன்றாலும், முகங்களில் வெறுப்பு மற்றும் ஆதங்கள் இருக்கின்றமை தெளிவாகத் தெரிகின்றது.
எங்களுக்கு தெரியும் உங்களால் வாழ முடியாத ஒரு நாட்டில் வாழ்கிறீர்கள். மூன்று வேளை சாப்பாட்டிற்கோ இரண்டு வேளை சாப்பாட்டிற்கோ முடியாது, பிள்ளைகளுக்கு சாப்பாட்டினை வழங்க முடியாது, பிள்ளைகளுக்கு தேவையான பாடசாலை உபகரணங்களை வழங்க முடியாது, ரணிலுக்கு புண்ணியமாகட்டும் இருந்த பெட்ரோல் வரிசை மட்டும் இப்போதைக்கு இல்லை.. மற்றைய அனைத்தினதும் விலை வானமளவுக்கு உயர்ந்து நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
உலகிற்கே நாம் கடன்காரராக மாறியுள்ளோம். இதனால் உலக நாடுகள் எமக்கு கடன் வழங்குவதில்லை.
நாட்டினை வங்குரோத்து நிலைக்கு தள்ளியவர்கள் மீண்டும் தலைதூக்குகின்றனர். எனது அரசியல் வாழ்க்கைக்கு 13 1/2 வருடம் அதிலும் 2 வருடம் சிறைச்சாலையில் இருந்தேன்..”