இலங்கையைப் போன்று ஒரு போராட்டப் பின்னணிக்குள் தமது நாடு இழுக்கப்படாது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
லாஹூரில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர், இலங்கையைப் போன்று தேர்தலை ஒத்திவைக்கும் எண்ணம் தமது கட்சிக்கு இல்லை என தெரிவித்தார்.
எனவே, பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கு ஒரு தூண்டுதலாக, டிசம்பர் 23 அன்று, தனது கட்சியின் கீழ் இருந்த இரண்டு உள்ளூராட்சி மன்றங்கள் அவற்றின் பதவிக் காலம் முடிவதற்குள் கலைக்கப்பட்டதாக கான் குறிப்பிட்டார்.
தேர்தலை நடத்துவதற்கு மத்திய அரசில் செல்வாக்கு செலுத்துவதே இதன் நோக்கம் என்கிறார்.
ஏப்ரல் மாதம் நடந்த பாராளுமன்ற வாக்கெடுப்பில் இம்ரான் கான் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்டார், அதன் பிறகு அவர் தற்போது அவசர தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார்.
தெற்காசியாவில் நிச்சயமற்ற போராட்டங்கள் சரியான நேரத்தில் தேர்தலை நடத்தத் தவறியதால் ஏற்பட்டதாக இம்ரான் கான் மேலும் குறிப்பிட்டார்.