follow the truth

follow the truth

November, 13, 2024
Homeஉள்நாடுமுட்டை பிரச்சினையில் தலையிட வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை

முட்டை பிரச்சினையில் தலையிட வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை

Published on

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் தவறான கணக்கீடுகளினால் இந்த நாட்டில் முட்டைகளுக்கு நிலையான விலையை நிர்ணயிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளர் அநுரசிறி மாரசிங்க குற்றம் சுமத்தினார்.

அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தினால் நீதிமன்றில் பெறப்பட்ட தடை உத்தரவின் பிரகாரம் 50 ரூபாவாக இருந்த முட்டை தற்போது கட்டுப்பாட்டு விலையின்றி 55 ரூபாவிற்கும் அதிகமான விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக அநுரசிறி மாரசிங்க தெரிவித்தார்.

நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட உத்தரவு காரணமாக நெருக்கடியாக இருந்த முட்டை விலை மேலும் நெருக்கடியாக மாறியுள்ளதாகவும், இந்த நிலையில் முட்டை மற்றும் பண்ணை விலைக்கு கட்டுப்பாட்டு விலை இல்லை எனவும் அநுரசிறி மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

“… முட்டை ஒன்றின் சில்லறை விலை 50 ரூபாவுக்கு மேல் செல்லாது என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க பொறுப்புடன் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போது முட்டை விலை 60 ரூபாயாக உயர்ந்துள்ளது.

தற்போதைய இந்த நெருக்கடிக்கு மூல காரணம் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் தவறான கணக்கீடுதான். 100% தவறான கணக்கீடுகளால் நாடு முழுவதும் சிக்கலில் உள்ளது. ஊட்டச் சத்து குறைபாடு அதிகரித்துள்ள இவ்வேளையில், சத்தான உணவுப் பொருட்களின் விலை கட்டுப்பாட்டை இழக்கும் போது, ​​எதிர்காலத்தில் இந்த நாடு போசாக்குக் குறைபாட்டின் அடிப்படையில் மிகக் கடுமையான நிலைமைக்கு உள்ளாகும்.

நாங்கள் அப்பாவி ஏழை மக்களுக்காக பேசுகிறோம். இந்நிலையை உணர்ந்த நுகர்வோர் சேவை அதிகாரசபை முட்டைக்கான கட்டுப்பாட்டு விலையை நிர்ணயித்துள்ளது. இந்த விடயத்தில் இப்போதாவது தலையிடுமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம்..” என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இந்திய பெருங்கடல் என்றால் போதுமா? : இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும்

"இலங்கை மீது இந்தியா பொருளாதார தடை விதிக்க வேண்டும்" என இந்தியாவின் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்...

வாக்களிக்க கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக ரயில் சேவை

நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு வாக்களிக்க கிராமங்களுக்குச் செல்லும் மக்களின் வசதிக்காக பல ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக...

முட்டை விலை 60-65 ரூபா வரைக்கும் உயரும் சாத்தியம்

முட்டை ஒன்றின் விலை 60 ரூபா தொடக்கம் 65 ரூபா வரை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அகில இலங்கை...