சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்ட காரணமாக கைது செய்யப்பட்ட முன்னாள் ஆளுநர் அசாத் சாலியை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று அவர் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் 16 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் அசாத் சாலி கைது செய்யப்பட்டிருந்தார்.