முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிரான வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.
முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை செய்யப்பட்ட வழக்கில் துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. மரண தண்டனை கைதியாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த அவரை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.
முன்னாள் ஜனாதிபதியின் இந்த தீர்மானத்திற்கு எதிராக லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர மற்றும் அவரது மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர ஆகியோர் அடிப்படை உரிமை மனுக்களை தாக்கல் செய்தனர்.
துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எடுத்த தீர்மானத்தை செல்லுப்படியற்றது என உத்தரவிட கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை பெப்ரவரி 7 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
அனைத்து தரப்பினரும் முன்வைத்த வாதங்களை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் மனுக்களை விசாரணைக்கு எடுக்க தீர்மானித்துள்ளது.