follow the truth

follow the truth

November, 25, 2024
Homeஉள்நாடுசந்தையில் முட்டையின் விலை அதிகரிப்பு

சந்தையில் முட்டையின் விலை அதிகரிப்பு

Published on

நுகர்வோர் அதிகார சபையினால் முட்டைக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயம் செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இடைநிறுத்த தீர்மானித்ததையடுத்து சந்தையில் முட்டையின் விலை அதிகரித்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளை முட்டை ஒன்றின் விலை 43 ரூபாவாகவும் சிவப்பு நிற முட்டை ஒன்றின் விலை 45 ரூபாவாகவும் நுகர்வோர் அதிகார சபை நிர்ணயித்திருந்தது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை பெப்ரவரி 06 ஆம் திகதி வரை இடைநிறுத்துவதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் நேற்று (15) தீர்மானித்ததையடுத்து அதுவரை 50 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட முட்டையின் விலை தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முட்டைக்கான அதிகபட்ச விலையை நிர்ணயிக்கும் திறனை நுகர்வோர் விவகார அதிகார சபை இழந்ததையடுத்து, உற்பத்தியாளர்கள் தங்களுக்குத் தேவையான விலையை நிர்ணயித்துள்ளனர்.

கால்நடை தீவனத்தின் விலை குறைந்துள்ள போதிலும் கோழிகளை அதிகளவில் கொள்வனவு செய்து பராமரிப்பிற்கு தேவையான வருமானத்தை பெற்றுக்கொள்ளும் வகையில் முட்டையின் விலையை அதிகரிக்க வேண்டுமென அதன் தலைவர் ஆர்.எம்.சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

இது தொடர்பில் கருத்து தெரிவித்த முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க,

முட்டை உற்பத்தியாளர்களின் நியாயமற்ற விலைகளை உயர்த்துவதற்கு எதிராக நுகர்வோர் குறுகிய காலத்திற்கு முட்டைகளை கொள்வனவு செய்வதை தவிர்க்க வேண்டும்.

இதனிடையே, 10 முதல் 20 ரூபாய் வரை இருந்த முட்டை விலை, சில மாதங்களில், 50 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி வருவதால், குழந்தைகளின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய முடியாது உள்ளது

மேலும், இந்நாட்டில் அதிகரித்துள்ள ஊட்டச்சத்து குறைபாட்டிலிருந்து குழந்தைகளை காப்பாற்ற, அதிக புரதச்சத்து நிறைந்த உணவான முட்டைகளை குழந்தைகளுக்கு வழங்குவது அவசியம் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இன்று முதல் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு

நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான விசேட செயலமர்வு இன்று முதல் மூன்று நாட்களுக்கு இடம்பெறவுள்ளது. அதன்படி, முதலாம்...

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகியது

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகியது. அதற்கு முன்னதாக...

போனஸ் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மின்சார சபை ஊழியர் சங்கம் கோரிக்கை

இலங்கை மின்சார சபை இலாபகரமான நிலையை அடைந்துள்ளதால், ஊழியர்களுக்கான விசேட கொடுப்பனவை (போனஸ்) எதிர்வரும் 10 ஆம் திகதிக்கு...