follow the truth

follow the truth

September, 21, 2024
Homeஉள்நாடு"அறுபது ஓய்வூதியச் சட்டத்தை மாற்றினால், நீதிமன்றத்தினை நாடுவோம்"

“அறுபது ஓய்வூதியச் சட்டத்தை மாற்றினால், நீதிமன்றத்தினை நாடுவோம்”

Published on

60 வயதுக்கு மேல் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கினால், சுகாதாரத் தொழிற்சங்கங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடுவோம் என்று சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்திருந்தார்.

ஓய்வுபெறும் வயதை நீட்டித்து நீண்ட காலம் பணிபுரிய அனுமதி வழங்குவது ஒரு சிறப்புச் சலுகையே தவிர, சேவைத் தேவையல்ல என்றார்.

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவ அதிகாரிகள் அல்லாத ஏனைய சுகாதார நிபுணர்கள் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு பணிந்துள்ளதாகவும், சுகாதார சேவையில் ஒரு தொழிலை மாத்திரம் பாரபட்சம் காட்டுவது நியாயமற்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொரளை சங்க கேட்போர் கூடத்தில் நேற்று (15) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், நீதி கிடைக்காவிடின் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடுவதற்கு தமது சங்கம் தயாராகவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் மருத்துவ நிபுணத்துவ அதிகாரிகள் என பெரும் எண்ணிக்கையிலான வைத்திய நிருவாக உத்தியோகத்தர்களும் இந்த அதியுயர் பாக்கியத்தை அனுபவிக்க தயாராக இருப்பதாகவும் அதன் காரணமாக சுகாதார சேவையின் வினைத்திறனை விருத்தி செய்யும் வாய்ப்பும் இழக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இது ஒரு சேவைத் தேவையல்ல என்றும், சுகாதார அமைச்சு இது தொடர்பான சரியான தகவல்களை வெளியிடாமல் நாட்டை தவறாக வழிநடத்துவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி தேர்தல் – தபால்மூல வாக்குகளை எண்ணும் பணி ஆரம்பம்

2024 ஜனாதிபதி தேர்தலுக்கான தற்போது மாவட்ட ரீதியாக தபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள்...

2024 ஜனாதிபதி தேர்தல் – 4 மணிவரை பதிவான வாக்குப்பதிவு

இலங்கையின் 9வது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இதன்படி, மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட...

செந்தில் தொண்டமான் தனது வாக்கினை செலுத்தினார்

கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான், 2024 ஆண்டின் ஜனாதிபதி தேர்தலுக்கான தனது...