follow the truth

follow the truth

November, 25, 2024
Homeஉள்நாடுஎண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் நாளை முதல் ஆரம்பம்

எண்ணெய் சுத்திகரிப்பு பணிகள் நாளை முதல் ஆரம்பம்

Published on

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகள் நாளை (16) மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் தொடர்ச்சியாக எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் முன்னெடுக்கப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உவைஸ் மொஹமட் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் சுத்திகரிப்பிற்கு தேவையான மசகு எண்ணெய் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் .

உற்பத்தி நடவடிக்கைகளுக்கு போதுமான மசகு எண்ணெய் கிடைக்காமையால் கடந்த ஒக்டோபர் மாதம் 07ஆம் திகதி சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

அதற்கமைய, சுமார் 70 நாட்களாக சுத்திகரிப்பு நிலையம் மூடப்பட்டுள்ளது.

நாளை(16) எரிபொருள் சுத்திகரிப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், நாளாந்தம் 1,500 மெட்ரிக் தொன் டீசல், 550 மெட்ரிக் தொன் பெட்ரோல், மண்ணெண்ணெய் மற்றும் விமானத்திற்கு தேவையான 950 மெட்ரிக் தொன் எரிபொருள் ஆகியவற்றை விநியோகிக்க முடியும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இரு அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்

இரண்டு அமைச்சுக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க புதிய செயலாளர்களை நியமித்துள்ளார். இது தொடர்பான நியமனக் கடிதங்கள் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி...

அனர்த்த முகாமைத்துவ நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதுமானதல்ல

அனர்த்த முகாமைத்துவத்தில் நிறுவன கட்டமைப்புகளை வலுப்படுத்துவது மட்டும் போதாது எனவும், தீர்வுகளை அடி மட்டத்திற்கு கொண்டு வர முயற்சிகள்...

மனித கடத்தலில் முன்னாள் அமைச்சர் மனுஷவுக்கு தொடர்பிருப்பதாக குற்றச்சாட்டு?

முன்னாள் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சந்தேகத்திற்குரிய E8 வீசா முறையை பயன்படுத்தி சட்டவிரோதமான...