ஒரு தனிநபர் தனது அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துக் கொள்ள அவருக்கு ஒரு மாதத்திற்கு குறைந்தபட்சம் 13,810 ரூபா (தேசிய மட்டத்தில்) தேவைப்படுகிறது என புள்ளிவிபரவியல் மற்றும் தொகை மதிப்பு திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட வாழ்க்கை செலவு தரப்படுத்தலுக்கமைய கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஒருவரது ஒருமாத அடிப்படை தேவைகளுக்கான செலவு 14,894 ரூபாவாக காணப்படுவதுடன்,மொனராகலை மாவட்டத்தில் வாழ்பவரின் ஒருமாத செலவு 13,204 ரூபா என திணைக்களம் வாழ்க்கை செலவு சுட்டியை தரப்படுத்தியுள்ளது.
தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் கடந்த செப்டெம்பர் மாதம் வெளியிட்ட தரப்படுத்தல் அறிக்கையில் தேசிய மட்டத்திலான மாத செலவு 13,772 ரூபாவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஒக்டோபர் மாதம் வாழ்க்கை செலவு 13,810 ரூபாவாக மதிப்பிடப்பட்டுள்ளது,அவ்வாறாயின் இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கை செலவு 38 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
செப்டெம்பர் மாதம் கொழும்பு மாவட்டத்தின் தனிநபர் வாழ்க்கை செலவு 14,854 ரூபாவாக காணப்பட்டது,ஒக்டோபர் மாதம் இந்த தொகை 14,894 ரூபாவாக காணப்படுகிறது,அவ்வாறாயின் இடைப்பட்ட காலத்தில் வாழ்க்கை செலவு 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.