follow the truth

follow the truth

November, 25, 2024
Homeஉள்நாடுதமிழர்களுக்கு தீர்வை வழங்குவது பைத்தியக்காரத்தனம்

தமிழர்களுக்கு தீர்வை வழங்குவது பைத்தியக்காரத்தனம்

Published on

நாட்டில் உள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வினை காண்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் முயற்சி பைத்தியக்காரத்தனம் என நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில தெரிவித்தார்.

65 வருடங்களாக தீர்க்க முடியாத இனப் பிரச்சினைக்கு 52 நாட்களில் தீர்வினை காண முடியும் என அரசாங்கம் நினைப்பது வேடிக்கையானது என்றும் தெரிவித்தார்.

அனைத்து கட்சிக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்ட விடயம் குறித்து கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இந்த கூட்டத்தில் தமிழ் பிரிவினைவாதிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சிங்கள தரப்புக்கள் எதிர்ப்பு வெளியிட்டதாக உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

இதேவேளை பெப்ரவரி 4 ஆம் திகதிக்கு முன்பாக, அதிகாரப் பரவலாக்கம் குறித்து அனைவரும் இணக்கத்திற்கு வரவேண்டும் என்று ஜனாதிபதி இதன்போது கேட்டுக்கொண்டதாக கூறினார்.

65 வருடங்களாக இதுதொடர்பாக தொடர்ச்சியாக முயற்சிகள் எடுக்கப்பட்டபோதும் இதன்மூலம் பெற்றுக் கொள்ளப்பட்ட முடிவுகள் தொடர்பாக அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்றார்.

இந்நிலையில், மீண்டும் இதற்கான முயற்சிகளை எடுக்கும் இந்த அரசாங்கத்திற்கு உண்மையில் பைத்தியம் பிடித்துவிட்டதாகவே கருத வேண்டும் என்றும் உதய கம்மன்பில தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

டிசம்பர் 6க்கு முன் கட்டண திருத்த முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு அறிவித்தல்

எதிர்வரும் டிசம்பர் 6 ஆம் திகதிக்கு முன்னர் கட்டண திருத்த முன்மொழிவை சமர்ப்பிக்குமாறு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு, மின்சார...

மறுஅறிவித்தல் வரை மீனவர்கள் கடல் தொழிலுக்குச் செல்ல வேண்டாம்

மன்னார் மாவட்டத்தில் இருந்து மீனவர்களை மறு அறிவித்தல் வரை கடற் தொழிலுக்குச் செல்ல வேண்டாம் என மன்னார் மாவட்ட...

டக்ளஸுக்கு எதிரான பிடியாணை உத்தரவு மீள பெறப்பட்டது

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை உத்தரவு இன்று(25) மீள பெறப்பட்டுள்ளது. தனியார் வர்த்தகர்...