உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இரண்டு மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார மற்றும் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியவர்களினால் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மற்றைய மனு தயாசிறி ஜயசேகர, லக்ஸ்மன் கிரியெல்ல, அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் எம்.ஏ சுமந்திரன் ஆகியவர்களினால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் மற்றும் பிரதமர் ஆகியோர் குறித்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தற்போதைய உள்ளுராட்சி மன்றங்களின் ஆயுட்காலம் அடுத்த வருடம் மார்ச் 19ஆம் திகதியுடன் முடிவடைவதாகவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்ட விதிகளின்படி தேர்தல் தொடங்குவதற்கு 6 மாதங்களுக்கு முன்னதாகவே இச்செயற்பாடு ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இது தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மக்களின் சர்வஜன வாக்குரிமை மீறப்படுவதாக மனுக்களில் கூறப்பட்டுள்ளது.
எனவே, எதிர்மனுதாரருக்கு அழைப்பாணை அனுப்பவும், உள்ளுராட்சி தேர்தலை நடத்த விருப்பம் தெரிவித்து அரசாணை பிறப்பிக்கவும், தேர்தலை நடத்த உத்தரவிடவும் மனுதாரர் கோரிக்கை விடுத்துள்ளார்.