நாட்டின் தற்போதைய நிலைமை, அரசியல் அமைப்பு மற்றும் பல விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பசில் ராஜபக்ஷ நாட்டிற்கு வந்ததன் பின்னர் ஜனாதிபதியை சந்திப்பது இதுவே முதல் தடவை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது