நாடு பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மிகவும் நெருக்கடியான சூழ்நிலையில் இருந்தாலும், இளைஞர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கட்டியெழுப்பவே நாட்டைக் கையகப்படுத்த முன்வந்ததாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இன்றைய தினத்தைப் பற்றி சிந்தித்து தீர்மானங்களை எடுக்காமல் 25 வருடங்களின் எதிர்காலம் குறித்து சிந்தித்து தீர்மானங்களை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்று நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கு இளைஞர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தினார்.
இன்று (11) காலை கொழும்பு றோயல் கல்லூரியில் நடைபெற்ற சிம்ம தினத்தை முன்னிட்டு மாவட்ட 306 C-2 லியோ கழகத்திற்கு 6,500 உறுப்பினர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.