follow the truth

follow the truth

November, 26, 2024
Homeஉள்நாடுஅனர்த்தங்களை சீர்செய்ய விசேட அமைச்சரவை பத்திரம்

அனர்த்தங்களை சீர்செய்ய விசேட அமைச்சரவை பத்திரம்

Published on

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள இடர் நிலைமைகளினால் நாட்டின் பல பாகங்களிலும் பாடசாலைகள் சேதமடைந்துள்ளன. அவ்வாறு சேதமடைந்த பாடசாலைகளின் தகவல்களையும் சேத மதிப்பீடுகளையும் அந்தந்த மாகாணங்களின் கல்விப் பணிப்பாளர்களிடம் கல்வி அமைச்சு கோரியுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அ.அரவிந்தகுமார் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,

பாடசாலைகளின் தகவல்கள் கிடைக்கப் பெற்றதும் சேதங்களை சீர்செய்து பாடசாலைகளை உடன் இயக்கி மாணவர்களின் கற்றல்-கற்பித்தல் செயற்பாடுகளை வழமைக்கு கொண்டு வர திட்டமிட்டுருக்கின்றோம்.

இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மலையகத்தை பொறுத்தவரை பதுளை மாவட்டமே அதிகளவு சேதங்களை எதிர்நோக்கியுள்ளது. இங்கு சுமார் 900க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது வீடுகளை முழுமையாக அல்லது பகுதியளவில் இழந்து நிர்கதிக்கு ஆளாகியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் நான் தொடர்புகளை ஏற்படுத்தி, உடனடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வழங்கவும், உலர் உணவுப் பொருட்களையும் வழங்க நடவடிக்கைகளை அந்நிலையம் ஊடாக மேற்கொண்டுள்ளேன்.

பலத்த காற்றின் காரணமாக கடுமையாக சேதங்களை எதிர்நோக்கியுள்ள வீடுகளை திருத்தி வழமை நிலைக்கு கொண்டு வர வெறும் 10 ஆயிரம் ரூபாய் பணம் போதுமானதாக இல்லை என்பது நாமறிந்த விடயம். ஆனால் அனர்த்த நிலைமையின் போது செயற்பட வேண்டிய நடைமுறைகள் தொடர்பான சுற்றறிக்கையின் காரணமாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்திற்கு 10ஆயிரத்திற்கும் அதிகமான தொகையை வழங்க முடியாத நிலைமை இருக்கிறது.

இந்நிலையில் குறித்த வீடுகளை முழுமையாக சீர்திருத்தம் செய்து வழமைக்கு கொண்டு வருவதற்கு நாங்கள் விசேட அமைச்சரவை பத்திரம் ஒன்றை தாக்கல் செய்து தேவையான நிதியைப் பெற்று அவற்றை திருத்தம் செய்ய வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது. அதை அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர் என்ற வகையில் துரிதமாக மேற்கொள்ளவதற்கு உயர்மட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மழையால் எலிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

மழையால் லெப்டோஸ்பைரோசிஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி, மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையிலும், ஒக்டோபர் மாதம் முதல்...

அரிசியின் கட்டுப்பாட்டு விலையை உயர்த்த கோரிக்கை

கடந்த இரண்டு மாதங்களில் கிட்டத்தட்ட இருநூறு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான ஆலைகள் மூடப்பட்டுள்ளதாக ஐக்கிய அரிசி உற்பத்தியாளர்கள்...

மலையகப் பாதையில் ரயில் போக்குவரத்துக்கு இடையூறு

மலையக புகையிரதத்தில் பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையிலான புகையிரத பாதையில் தடைகள் ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. பதுளைக்கும் பண்டாரவளைக்கும் இடையிலான...