follow the truth

follow the truth

November, 26, 2024
Homeஉள்நாடுஇலங்கையில் 41 இடங்கள் அபாய வலயங்களாக அறிவிப்பு

இலங்கையில் 41 இடங்கள் அபாய வலயங்களாக அறிவிப்பு

Published on

இலங்கையில் கடந்த வாரம் மாத்திரம் 1,602 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது நாடு முழுவதும் டெங்கு நோய் பரவுவதில் கணிசமான அதிகரிப்பு காணப்படுகிறது.

கடந்த வாரம் கண்டறியப்பட்ட டெங்கு நோயாளர்களில், கம்பஹா மாவட்டத்தில் 390 நோயாளர்கள் கண்டறியப்பட்டதோடு, கொழும்பு பிராந்தியத்தில் 272 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அத்துடன் யாழ்ப்பாணம், கல்முனை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் கடந்த வாரம் டெங்கு நோயாளர்கள் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

2021 இல் கண்டறியப்பட்ட 27,844 பேருடன் ஒப்பிடுகையில், இந்தாண்டு இதுவரை இலங்கையில் மொத்தம் 68,928 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் இலங்கையில் உள்ள 41 MOH பிரிவுகளை டெங்கு அபாய வலயங்களாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு அடையாளம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வெள்ளப் பெருக்கு அபாய எச்சரிக்கை

நிலவும் கடும் மழை காரணமாக மகாவலி கங்கை, ஹெத ஓயாவை அண்மித்த தாழ்நிலப்பகுதிகளில் எதிர்வரும் 48 மணித்தியாலங்களில் வெள்ளப்...

ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பேரவையொன்றை நிறுவுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை

ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பேரவையொன்றை நிறுவுவதற்கு கல்வி அமைச்சு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து ஆசிரியர்களும் இச்சபையில் பதிவு செய்திருக்க வேண்டும்...

“கல்வி தொடர்பான மாற்றங்களை அரசு மிகுந்த கவனத்துடன் எடுக்கும்”

மேலதிக வகுப்புகளை தடை செய்ய தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று...