இந்தியன் பிறீமியர் லீக்கில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபியில் இன்று மாலை நடைபெற்ற கொல்கத்தா நைற் றைடெர்ஸ் அணிக்கெதிரான போட்டியில் வெற்றி பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணி புள்ளிப் பட்டியலில் மீண்டும் முதலிடத்துக்கு வந்துள்ளது.
முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா 6 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு, 172 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய சென்னை 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.