லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் திசர பெரேரா தலைமையிலான Jaffna Kings அணி வெற்றியீட்டியது.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Jaffna Kings அணி 19 ஓவர்கள் 5 பந்துகளில் 137 ஓட்டங்களைப் பெற்றது.
Jaffna Kings அணி சார்பாக துனித் வெல்ல 20 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற்றார்.
இதில் 4 நான்கு ஷாட்களும் அடங்கும்.
சோயிப் மாலிக் 30 ஓட்டங்கள்.
தனஞ்சய சில்வா 19 பந்துகளில் 29 ஓட்டங்களைப் பெற்றார்.
இதில் 2 அபாரமான சிக்ஸர்கள் மற்றும் 3 பவுண்டரிகளும் அடங்கும்.
பின்னர் களம் இறங்கிய Galle Gladiators அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 113 ஓட்டங்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
Galle Gladiators அணியில் தலைவர் குசல் மெண்டிஸ் அரைசதம் அடித்தார்.
பந்துவீச்சில் Jaffna Kings அணி சார்பாக பினுர பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆட்ட நாயகன் விருதை துனித் வெல்லாலகே பெற்றார்.