follow the truth

follow the truth

November, 26, 2024
Homeஉள்நாடுஇரட்டைக் குடியுரிமையுடைய உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றில் இருப்பதாக வெளியான தகவல் குறித்து ஆராய்வேன் - சபாநாயகர்

இரட்டைக் குடியுரிமையுடைய உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றில் இருப்பதாக வெளியான தகவல் குறித்து ஆராய்வேன் – சபாநாயகர்

Published on

இரட்டைக் குடியுரிமை கொண்ட உறுப்பினர் ஒருவர் நாடாளுமன்றில் இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் முன்வைத்த கருத்தொன்றுக்கு பதிலளிக்கையிலேயே சபாநாயகர் இதனை தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவிக்கையில்,

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் நாயகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை நாடாளுமன்றத்துக்கு நேற்று (05) சமர்ப்பித்தேன்.

நாடாளுமன்ற பிரதான செயலாளரினால் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இராஜதந்திர கடவுசீட்டு விநியோகிக்குமாறு தெரிவித்து அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாகவே அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரித்தானிய பிரஜை என்பதால் அவருக்கு இராஜதந்திர கடவுச்சீட்டு ஒன்று வழங்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே சபாநாயகர் என்றவகையில் இந்த சம்பவம் தொடர்பில் ஏதாவது அறிந்திருக்கிறீர்களா என கேட்கின்றேன் என்றார்.

இதேவேளை எதிர்க்கட்சி உறுப்பினர் சமிந்த விஜேசிறி தெரிவிக்கையில்,

21 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையில் இரட்டைக் குடியுரிமையை கொண்ட பெண் எம்.பியொருவர் சட்டத்திற்கு புறம்பான வகையில் இந்த நாடாளுமன்றத்தில் இருக்கின்றார். இதன்படி இந்த விடயத்தில் சபாநாயகர் முன்னெடுக்கும் நடவடிக்கை என்ன என்றார்?

இதன்போது பதிலளித்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து அறிவுறுத்துகின்றேன் என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று(26) விளக்கமளித்தார். “பல்வேறு...

திகதி மாற்றியமைத்து விற்பனை செய்யவிருந்த அரிசி மூடைகள் மீட்பு

இரண்டரை வருடங்களுக்கு முன்னர் ​​உற்பத்தித் திகதி பொறிக்கப்பட்டிருந்த 17,925 கிலோ அரிசி தொகையை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA)...

தெதுரு ஓயாவின் நீர்மட்டம் அதிகரிப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை

தெதுரு ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் தாழ்வான பகுதிகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, வாரியபொல, நிகவெரட்டிய, மஹவ, கொபெய்கனே,...