ஐரோப்பிய ஒன்றியத்தின் ஐவர் அடங்கிய தூது குழுவொன்று நாளை திங்கட்கிழமை இலங்கைக்கு உத்தியோக பூர்வமான விஜயமொன்றை மேற்கொண்டு வருகை தரவுள்ளது.
இந்த விஜயத்தின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ உட்பட அரசாங்கப் பிரதிநதிகள், எதிர்க்கட்சித்தலைவர், எதிர் அணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள், சிவில் சமூகத்தினர், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கையின் நிலைமைகளை நேரில் ஆய்வு செய்து ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச்சலுகையை வழங்குவதா இல்லையா என்று மேற்படி ஐவர் கொண்ட குழு அறிக்கையொன்றை தயாரித்து ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றில் சமர்ப்பிக்கவுள்ளது.
இதேவேளை, இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச்சட்டம் சம்பந்தமாக அமைத்துள்ள குழுக்களின் செயற்பாடுகளையும் அவற்றின் அறிக்கைளையும் ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவிடத்தில் வெளிப்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயனாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.
அத்துடன், 500மில்லியன் டொலர்களுக்கான வர்த்தகத்துக்கான சலுகை வரி கிடைக்குமென எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டள்ளார்.