சோமாலிய தலைநகரின் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இடம்பெற்ற மகிழுந்து தற்கொலை குண்டு தாக்குதலில் சுமார் 8 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் மேலும் பலர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த தாக்குதலுக்கு அல்-கொய்தா அமைப்புடன் தொடர்பினை கொண்ட அல்-ஷபாப் என்ற குழுவினர் உரிமை கோரியுள்ளனர்.
ஜனாதிபதி மாளிகைக்கு மிக அருகில் உள்ள பாதுகாப்பு படைத்தரப்பினரின் சோதனைச் சாவடியை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட தலைமை காவல்துறை அதிகாரி முக்காவிட் முடே தெரிவித்துள்ளார்.