இலங்கையில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது என பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணம் மற்றும் தென் மாகாணம், அனுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை மிக மிக அதிகளவில் அதிகரித்துள்ளதுள்ளதாக ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த, விசேட அதிரடிப்படையினரை கடமையில் ஈடுபடுத்த தீர்மானிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மைக்காலங்களில் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ் மாவட்டத்தில் பாடசாலை மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. மாணவர்களுக்கான போதைப்பொருள் விநியோகத்தை ஒரு சில குழுக்கள் திட்டமிட்ட முறையில் முன்னெடுத்து வருகின்றபோதும், பொலிஸார் எவ்வித கடுமையான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்