follow the truth

follow the truth

September, 23, 2024
Homeஉள்நாடுஇலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்கள் தேவை

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்கள் தேவை

Published on

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்கள் அவசியம் என சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் நேற்று வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான சீர்திருத்தங்கள் குறித்து USAID இன் புரிதலை மேம்படுத்துவதற்காக சமந்தா பவர் நேற்று (01) இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரியை சந்தித்ததாக USAID செய்தித் தொடர்பாளர் ஜெசிகா ஜென்னிங்ஸ் தெரிவித்தார்.

இலங்கையின் மீட்சி மற்றும் வளர்ச்சிக்கு USAID எவ்வாறு சாத்தியமான முன்னோக்கி செல்லும் பாதையை ஆதரிக்க முடியும் என இருவரும் கலந்துரையாடினர்.

செப்டம்பரில் இலங்கைக்கு விஜயம் செய்த சமந்தா பவர், இலங்கையின் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மற்றும் ஒதுக்கப்பட்ட சமூகங்களின் அவசரத் தேவைகளை நிவர்த்தி செய்தல் உட்பட, இலங்கையின் சிக்கலான நெருக்கடியைத் தீர்ப்பதற்கு உதவுவதற்கான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்கள் தேவை என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். சமாதானம் மற்றும் செழிப்பைப் பாதுகாக்க உதவுவதற்காக, இலங்கையுடனான தனது நீண்டகால கூட்டாண்மையை மேலும் வளர்ப்பதற்கு USAID உறுதியாக உள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பங்குச் சந்தை விலைக் குறியீடு உயர்ந்துள்ளது

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு நாளின் பின்னர், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண்...

புதிய அமைச்சரவை நியமனத்தில் நான்கு உறுப்பினர்கள்

புதிய ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க நியமிக்கப்பட்டுள்ள நிலையில், புதிய அமைச்சரவை நியமனம் இன்று இடம்பெறாது என தேசிய...

இந்நாள் ஜனாதிபதிக்கு முன்னாள் ஜனாதிபதிகள் வாழ்த்து

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இலங்கை மக்கள் எதிர்பார்க்கும்...