follow the truth

follow the truth

April, 2, 2025
Homeஉள்நாடுமட்டக்களப்பை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

மட்டக்களப்பை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடல்

Published on

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான இடங்களை தெரிவு செய்வது தொடர்பிலான கலந்துரையாடல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் கே. கருணாகரம் உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள் சிலர் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெருகல் ஆறு முதல் மட்டக்களப்பு வரையான கடற்கரையை அண்மித்த அரச மற்றும் தனியார் இடங்களை அடையாளம் காண்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறித்த பகுதியை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்து 2023 ஆம் ஆண்டில் மட்டக்களப்பை சிறந்த சுற்றுலாத்தலமாக மாற்றுவதே இதன் நோக்கம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலையில் பேருந்து கட்டணம் உயரும் சாத்தியம்

எதிர்வரும் ஜுலை மாதத்தில் கண்டிப்பாக பேருந்து கட்டணங்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின்...

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சட்டவிரோத கைது நடவடிக்கைகளைக் கண்டிக்கிறது

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எந்தவொரு நபரும் சட்டப்பூர்வமான வழியில், ஜனநாயக முறையில் தமது கவலைகளையும் கரிசனைகளையும் வெளிப்படுத்துவதற்காக...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை

தமிழ், சிங்கள புத்தாண்டுக்காக தங்கள் ஊர்களுக்கு செல்லும் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக விசேட பேருந்து சேவையை இயக்க...