follow the truth

follow the truth

December, 24, 2024
HomeTOP1'சர்வதேச நாணய நிதியத்தின் தீர்வுகள் வேதனையாகவும் இருக்கலாம்'

‘சர்வதேச நாணய நிதியத்தின் தீர்வுகள் வேதனையாகவும் இருக்கலாம்’

Published on

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது வைத்தியரை பார்க்கச் செல்வது போன்றது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு.இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

அது தரும் தீர்வுகள் சில சமயங்களில் விரும்பத்தகாததாக கசப்பாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் கருத்துத் தெரிவித்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர், நிதி நல்லிணக்கத்தைப் பேணுவது இன்றியமையாதது என்றும், அதற்காக அரசியலமைப்பு ஏற்பாடுகள் போன்ற சட்ட காரணிகளால் நிதி முகாமைத்துவம் ஆதரிக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

இலங்கை மத்திய வங்கியை அபிவிருத்தி வங்கியாகக் கருதாது அதன் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் ஆதரவளித்தாலும் இல்லாவிட்டாலும் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஒன்பது வயது சிறுவனின் உயிர் பலிக்கு யார் காரணம்?

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவன் சத்திரசிகிச்சையின் பின்னர் மயக்கமடைந்த நிலையில் உயிரிழந்தமைக்கு வைத்தியசாலை...

உப்பு இறக்குமதிக்கு டெண்டர் கோரல்

உப்பு இறக்குமதி தொடர்பாக அரச வணிக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தால் சர்வதேச டெண்டர் கோரப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை...

புதிய அரசியலமைப்பில் சுகாதாரம் மனிதனின் அடிப்படை உரிமையாக்கப்படும்

புதிய அரசியலமைப்பு மக்களின் அடிப்படை மனித உரிமையாக சுகாதாரத்தை அணுகுவதற்கான உரிமையை பிரகடனப்படுத்தியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக...