follow the truth

follow the truth

November, 24, 2024
Homeஉள்நாடுஇலங்கையில் இந்திய ரூபாய்

இலங்கையில் இந்திய ரூபாய்

Published on

10 ஆயிரம் டொலர்கள் பெறுமதியான இந்திய ரூபாயை இலங்கையர்கள் பணமாக வைத்திருப்பதற்கு இந்திய அரசாங்கம் அனுமதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆசிய நாடுகளில் இந்திய ரூபாயை பிரபலப்படுத்தவும், டொலரைச் சார்ந்திருப்பதைக் குறைப்பதற்குமான இந்திய அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இணங்க இந்த தீர்மானம்  எடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ரூபாய் இலங்கையில் சட்டபூர்வமானதாக இருக்காது என்பதால் அதை வெளிநாட்டு நாணயமாக நியமிக்க இலங்கை விடுத்த கோரிக்கைக்கு இந்தியா அனுமதி வழங்கியுள்ளது.

இலங்கைக்கு தேவையான பணப்புழக்க ஆதரவை இது வழங்கும் என்றும் போதுமான டொலர் பணப்புழக்கத்தின் மத்தியில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது.

இலங்கையர்கள் இந்திய ரூபாயை வேறொரு நாட்டின் நாணயமாக மாற்ற முடியும் என்றும் அதற்காக இலங்கையின் வர்த்தக வங்கிகள், இந்தியாவின் வங்கிகளுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது இலங்கையின் வங்கிகள், வெளிநாட்டு நாணயத்தை இந்திய வங்கியில் வைத்திருக்கும் கணக்குகளான இந்திய நாஸ்ட்ரோ கணக்குகளை திறக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் பணம் அனுப்புதல் உட்பட அனைத்து கணக்கு பரிவர்த்தனைகளும் இலங்கையில் வசிப்பவர்கள் மற்றும் வசிக்காதவர்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையர்களுக்கிடையிலான பரிவர்த்தனைகள் வங்கிச் சேவைகள் ஊடாக மாத்திரமே மேற்கொள்ளப்பட முடியும் எனவும் அனுமதிக்கப்பட்ட செயற்பாடுகளை மாத்திரமே மேற்கொள்ள முடியும் எனவும் வங்கியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஏற்பாட்டிற்கு இந்தியா அனுமதி அளித்த போதிலும், இலங்கை மத்திய வங்கி இன்னும் இந்திய ரூபாயை நியமிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயமாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பண்டிகைக் காலத்தில் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு

பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள நுகர்வோர்...

புதிய எம்.பிக்களுக்கு நாளை முதல் வழிகாட்டல் செயலமர்வு

10வது பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட புதிய உறுப்பினர்களுக்கான வழிகாட்டல் செயலமர்வு நவம்பர் 25, 26, 27ஆம் திகதிகளில் நடத்தப்படவுள்ளது. புதிய...

முட்டை விலையில் மீண்டும் மாற்றம்?

சந்தையில் முட்டை விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக நுகர்வோர்கள் தெரிவிக்கின்றனர். கடந்த நாட்களில் 35-38 ரூபாவாக குறைந்திருந்த முட்டை தற்போது 40,...