ஒக்டோபர் மாத இரண்டாம் வாரத்தில் 200 க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கையைக் கொண்ட பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய மாகாண ஆளுனர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள் இணைந்து மாணவர்களுக்கான பாதுகாப்பான சூழல் மேற்குறிப்பிட்ட பாடசாலைகளில் உள்ளனவா என்பது குறித்த கண்காணிப்புக்களை ஆரம்பித்துள்ளதாகவும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.
பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற போது இதனைத் தெரிவித்தார்.
தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு எதிர்வரும் 1ஆம் திகதி நீக்கப்பட்டதன் பின்னர், அனைத்து பாடசாலைகளிலும் தொற்று நீக்கும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் கல்வி அமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.