follow the truth

follow the truth

April, 4, 2025
Homeஉள்நாடுகொள்ளளவை விடவும் இரு மடங்கு கைதிகள் சிறைச்சாலைகளில்

கொள்ளளவை விடவும் இரு மடங்கு கைதிகள் சிறைச்சாலைகளில்

Published on

பல்வேறு குற்றச்சாட்டுக்கள் காரணமாக இந்த ஆண்டு சிறைக்குச் செல்லும் கைதிகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் 65 சதவீதத்திற்கும் அதிகமானோர் போதைப்பொருள் தொடர்பான குற்றச்சாட்டில் சிறையில் இருப்பவர்கள் என சிறைச்சாலை திணைக்களத்தின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, 2022ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில், போதைப்பொருள் குற்றச்சாட்டில் சிறையில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை மொத்த கைதிகளின் எண்ணிக்கையில் 50 சதவீதத்தை விடவும் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டு நவம்பர் 25 ஆம் திகதிய தரவுகளின்படி,  நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் 26,000 க்கும் மேற்பட்ட கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியிலுள்ள சிறைச்சாலைகளில் அதிகபட்சமாக 13,200 கைதிகளை மாத்திரமே சிறைவைக்க முடியும்.

எனினும், தற்போது சிறைச்சாலைகளின் அதிகபட்ச கொள்ளளவை விட இரு மடங்கு சிறைக்கைதிகள் இருப்பதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர்  சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சிறுமி கூட்டுப்பாலியல் பலாத்காரம் – மாணவர்கள் உட்பட 7 பேர் கைது

பதினைந்து வயது சிறுமியை (மாணவியை) கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படும் வழக்கில், மாணவியின் காதலன் என்று கூறப்படும்...

தேர்தல் ஆணைக்குழுவினால் பொலிசாருக்கு விசேட அறிவுறுத்தல்கள்

உள்ளூராட்சி தேர்தல் சட்டம் மற்றும் செலவின ஒழுங்குமுறை சட்டம் தொடர்பில் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை...

பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞனின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இளைஞர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் நுகேகொட...