நாட்டில் மதுபாவனை 30 வீதத்தினால் குறைந்துள்ள போதிலும் மதுவரித் திணைக்களத்தின் வருமானம் அபரிமிதமாக அதிகரித்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
மதுபான போத்தல்களுக்கு பாதுகாப்பு ஒட்டிகள்(ஸ்டிக்கர்ஸ்) ஒட்டப்பட்டதை அடுத்து வருமானம் அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இதனையடுத்தே திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிக்க முடிந்தது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், ஆண்டின் முதல் 10 மாதங்களில், வருமானம் 20 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் ஜனவரி 1 ஆம் முதல் முதல் சந்தையில் உள்ள அனைத்து மதுபான போத்தல்களில் ஒட்டிகளை ஒட்டுவதற்கு, மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுபானங்கள் மீது விதிக்கப்படும் வரிகளை அரசாங்கம் எவ்வித முரண்பாடுகளும் இன்றி வசூலிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும் மதுவரித்திணைக்களத்தின் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.