follow the truth

follow the truth

February, 5, 2025
Homeஉள்நாடுராஜகிரிய சிறுநீரக கடத்தல் : அதிகரிக்கும் முறைப்பாடுகள்

ராஜகிரிய சிறுநீரக கடத்தல் : அதிகரிக்கும் முறைப்பாடுகள்

Published on

ராஜகிரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இடம்பெறும் சிறுநீரக கடத்தல் தொடர்பாக நேற்றைய தினம் (24) 5 பேர் பொரளை பொலிசில் முறைப்பாடு அளித்துள்ளனர்.

பெண் ஒருவர் உட்பட நால்வர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.

அவர்கள் கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ் பகுதியில் வசிப்பவர்கள். அவர்கள் இருபத்தி ஆறு முதல் நாற்பத்திரண்டு வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் மருத்துவ அறிக்கைகளைப் பெறுவதற்காக இந்தக் குழுவினர் சட்ட வைத்திய அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த மோசடிக்கு உறுதுணையாக இருந்த பிரதான பொலிஸ் பரிசோதகரை விசாரணை செய்வதற்காக மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

மூன்று முறை பணி இடைநீக்கம் செய்யப்பட்ட இந்த அதிகாரி, இந்த சிறுநீரக கடத்தலில் தொடர்புடைய மருத்துவமனை உரிமையாளர்களின் வாகனங்களில் சென்று தலா இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து முறைப்பாட்டாளர்களை மிரட்டி கடிதங்களில் கையெழுத்து வாங்கியது தெரியவந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இலங்கையின் பிரச்சினைகளை தீர்க்க ஐக்கிய நாடுகள் சபையின் ஆதரவு

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தர வதிவிட இணைப்பாளர் மார்க் அண்ட்ரே பிரஞ்சே (Marc-Andre Franche) மற்றும் பிரதமர்...

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்கத் தீர்மானம்

35,000 பட்டதாரிகளை அரச சேவையில் இணைப்பது குறித்து சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ கருத்து...

ஜனவரியில் நாட்டை வந்தடைந்த அதிகளவான சுற்றுலாப் பயணிகள்

வரலாற்றில் முதல்முறையாக, 2025 ஜனவரி மாதத்தில் அதிகூடிய சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகைத் தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி...