follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉள்நாடுமலிவான விலையில் எரிபொருள் கொள்வனவு

மலிவான விலையில் எரிபொருள் கொள்வனவு

Published on

ரஷ்யாவிடமிருந்து மானிய விலையில் கச்சா எண்ணெயைப் பெறுவதற்கு மாஸ்கோவுடன் பல பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்திய தொலைக்காட்சி ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான முரண்பாடுகள் இலங்கையின் பரிமாற்ற நெருக்கடியில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எரிபொருள், நிலக்கரி, உரம் ஆகியவற்றின் விலையேற்றம் காரணமாக இலங்கையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 33% மக்களுக்கு எரிபொருள் அவசியமான காரணியாக இருப்பதாகவும் அவர் கலந்துரையாடலில் குறிப்பிட்டுள்ளார்.

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியினால் எரிபொருள் விலை பாரியளவில் அதிகரித்துள்ளதால் எரிபொருளை பெறுவதில் இலங்கை சிரமத்திற்குள்ளாகியுள்ளதாகவும் இதன் காரணமாக மானிய விலையில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுடன் இலங்கை நீண்டகாலமாக சிறந்த இராஜதந்திர உறவுகளைப் பேணி வருவதாகவும், சர்வதேச நியதிகள் அல்லது சட்டங்களை மீறாமல் ரஷ்யாவுடன் இணைந்து செயற்பட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர்கள் இன்று சந்திப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர்கள் இன்று சந்திக்கவுள்ளனர். கொழும்பில்...

புதிய அமைச்சரவை பதவியேற்பு இன்று

புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பாராளுமன்றம் கலைப்பு...

விஜித ஹேரத்தை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது தாக்கல் செய்யப்பட்ட இலஞ்ச ஊழல் வழக்கு தொடர்பில் சாட்சியமளிக்க தேசிய மக்கள் கட்சியின்...