இந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான தேசிய அணியில் சாமிக்க கருணாரத்ன தெரிவு செய்யப்படாதது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவிடம் விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மதம் ஒன்றின் செல்வாக்கு காரணமாகவே சாமிக்க கருணாரத்ன தேசிய அணிக்கு தெரிவு செய்யப்படவில்லை என விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில்
அதனை கவனத்திற் கொண்டு விளையாட்டுத்துறை அமைச்சர் இந்த அறிவித்தலை வழங்கியுள்ளார்.
இலங்கை அணிக்கு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த வீரர்களே தெரிவு செய்யப்படுவதாக கருத்து நிலவுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.