follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉள்நாடுகோட்டாவுக்கு நீதிமன்ற அழைப்பாணை

கோட்டாவுக்கு நீதிமன்ற அழைப்பாணை

Published on

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமை தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான மனுக்கள் இன்று (24) முர்து பெர்னாண்டோ மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்டுள்ள ஜனாதிபதி மன்னிப்பை இரத்துச் செய்யும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திரவின் மகள் ஹிருணிகா பிரேமச்சந்திர, அவரது மனைவி சுமனா பிரேமச்சந்திர மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் ஜனாதிபதி சட்டத்தரணி கசாலி ஹுசைன் ஆகியோர் இந்த மனுக்களை சமர்ப்பித்துள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரொஷான் குணதிலக்க பதவி விலகினார்

மேல் மாகாண ஆளுநர் பதவியில் இருந்து ரொஷான் குணதிலக்க இராஜினாமா செய்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை...

மஹிந்த அமரவீர தனது அலுவலகத்தையும், பயன்படுத்திய வாகனத்தையும் கையளித்தார்

விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக கடமையாற்றிய மஹிந்த அமரவீர, தனது அலுவலகத்தையும், தான் பயன்படுத்திய வாகனத்தையும் அமைச்சின்...

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் – ருவான்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுத் தேர்தலில் போட்டியிட மாட்டார் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர்...