இலங்கை போன்ற நாட்டில் ஹிட்லர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இராணுவத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்களின் மகன்கள் மற்றும் மகள்களின் கைகளில் துப்பாக்கிகளை வழங்கி பட்டினியால் வாடும் மக்களின் தலைகளுக்கு வைக்குமாறு கூறுவது நியாயமா என நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்தும் அவரது உரையில் தேரிவிக்கையில்;
“.. ஜனாதிபதி பாராளுமன்றத்தில் பயங்கரமான அறிக்கை ஒன்றை வெளியிட்டார். மக்கள் தமது உரிமைகளுக்காக வீதியில் இறங்கினால் அவசரநிலை பிரகடனப்படுத்தி இராணுவத்தை பயன்படுத்தி ஒடுக்குவோம் என்றார்கள். இது இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் அவமதிக்கும் செயலாகும். அத்தகைய அறிக்கையை வெளியிடக்கூடாது என நாங்கள் கருதுகிறோம். மக்கள் வந்தாலே ஹிட்லர்களுக்கு இலங்கை போன்ற நாட்டில் வாய்ப்பு கிடைக்காது. மக்களுக்கு இருந்த பிரச்சினைகள் காரணமாகவே கோட்டாபய வெளியேற்றப்பட்டார்.
எமக்கு ஒரு விடயம் நன்கு தெளிவாக விளங்குகிறது. இவை அனைத்தும் மொட்டின் கொள்கைகள் தான். இது தான் ஏகாதிபத்திய ஹிட்லர் கொள்கை இவை அனைத்தும் மொட்டுக்குத்தான் சொந்தமானது. எனக்குத் தெரியாது ‘கபுடா ஹிட் த பஜட்’ ஆக இருக்குமோ தெரியவில்லை. இதனுள் இவைகளும் இருக்குமோ எனத் தெரியவில்லை. ஆதனால் இதனை விசேடமாக நினைவு கூற வேண்டும்..”