உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த அர்ஜென்டினா அணியை வீழ்த்தி நேற்று(22) சவுதி அரேபிய அணி வெற்றி பெற்ற மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் சவுதி அரேபியாவில் உள்ள அனைத்து ஊழியர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களுக்கு இன்று(23) விசேட விடுமுறை என அந்நாட்டு மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.
36 போட்டிகளில் தோல்வியே காணாத அர்ஜென்டினா அணியின் வெற்றிப் பயணம் இன்று சவூதி அரேபியாவுக்கு முன்னால் முடிவுக்கு வந்தது.
உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் நேற்று பிற்பகல் நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா அணியை 2க்கு 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சவுதி அரேபியா வெற்றி பெற்றது.