அவுஸ்திரேலியாவின் சிட்னி சிறைச்சாலையில் உள்ள கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு ஆளாகி பிணையில் விடுவிக்கப்பட்டதன் பின்னர் சில புகைப்படங்களை வெளிநாட்டு ஊடகங்கள் தற்போது வெளியிட்டுள்ளன.
சமீபத்தில் உலக கிண்ண டி20 கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்வதற்காக இலங்கை அணி ஆஸ்திரேலியா சென்ற நிலையில் அந்த அணியில் உள்ள சகலதுறை வீரரான தனுஷ்கா குணதிலகா ஒரு பெண்ணோடு பழகி, அவர் வீட்டுக்கு சென்று பாதுகாப்பற்ற முறையில் அவரின் விருப்பத்துக்கு மாறாக பாலியல் உறவு கொண்டதாகப் முறைப்பாடு எழுந்தது.
இதனையடுத்து, கடந்த 6 ஆம் திகதி அவர் ஆஸ்திரேலியா பொலிஸாரால் கைது செய்யபப்ட்டார். அவர் மீதான வழக்கில் ஆஸ்திரேலிய நீதிமன்றம் அவருக்கு அடுத்த ஆண்டு ஜனவரி வரை சிறைதண்டனை விதித்தது. குணதிலக இதற்கு முன்பும் இதுபோல பாலியல் சம்மந்தமான முறைப்பாடுகளில் சிக்கியுள்ள நிலையில், தனுஷ்கா குணதிலகா இலங்கை அணியில் இருந்து தற்காலிகமாக நீக்க இலங்கை கிரிக்கெட் வாரியம் தீர்மானித்திருந்தமையையும் குறிப்பிடத்தக்கது.