போலியான தகவல்களை சமர்ப்பித்து இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டு பெறுவதற்கான விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பித்ததாக குற்றம் சுமத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச தொடர்பான இரண்டாவது வழக்கின் விசாரணையை கொழும்பு பிரதான நீதிவான் நந்தன அமரசிங்க இன்று (18) ஒத்திவைத்துள்ளார்.
இதன்படி இந்த வழக்கு விசாரணைகள் அடுத்த வருடம் பெப்ரவரி 24 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்துடன் தொடர்புடைய 10 ஆவது சாட்சியான குடிவரவு – குடியகல்வு திணைக்கள முன்னாள் கட்டுப்பாட்டாளர் சூலானந்த பெரேராவை பெப்ரவரி 24ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு நீதிவான் அழைப்பாணையும் விடுத்துள்ளார்.