அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் முன்னணியின் (YMMA) கஹட்டோவிட்ட கிளையின் ஏற்பாட்டில் அத்தனகல்ல பிரதேச சபைக்கு உட்பட்ட ஓகொடபொல பிரதேசத்தின் சில சந்திகளுக்கு நேற்றுமுன்தினம் தினம் (07) வீதியோர குவிவாடிகள் (Roadside Convex Mirrors) பொருத்தப்பட்டன.
அகில இலங்கை YMMA அமைப்பின் கஹட்டோவிட்ட கிளைத் தலைவரும் அத்தனகல்ல பிரதேச சபை உறுப்பினருமான அல்ஹாஜ் கவ்ஸுல் பிர்தௌஸின் ஒருங்கிணைப்பில் அவர் மற்றும் பிரதேச மக்களது நிதியுதவியுடன் குறித்த வீதியோர குவிவாடிகள் பொருத்தப்பட்டன.
ஓகொடபொல – ருக்மலே பாதை சந்தி மற்றும் மஸ்ஜிதுர் ரவ்ழா ஜும்ஆ பள்ளிவாசல் சந்தி என்பவற்றில் குறித்த வீதியோர குவிவாடிகள் பொருத்தப்பட்டன. இதன்மூலம் பாதசாரிகள் மற்றும் வாகனங்களுக்கு எதிர்த்திசையில் வரும் வாகனங்களை இலகுவாக அறிந்து கொள்ள முடியும்.
எதிர்காலத்தில் ஓகொடபொல பிரதேசத்தில் மேலும் சில இடங்களிலும் கஹட்டோவிட்ட பிரதேசத்திலுள்ள முக்கிய சந்திகளிலும் வீதியோர குவிவாடிகள் பொருத்தப்படவுள்ளதாக அல்ஹாஜ் கவ்ஸுல் பிர்தௌஸ் தெரிவித்தார்.
