நியூயோர்க்கிலிருந்து வருகைதந்துள்ள ஐ.நாவின், அரசியல் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான திணைக்களத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் திரு.பீட்டர் டுயி (Peter Due) உயர் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை (15), கொழும்பிலுள்ள ஐ.நா அலுலக வளாகத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்து நாட்டின் சமகால நிலைமை குறித்துக் கலந்துரையாடினார்.