இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் திருமதி சாரா ஹல்டனுக்கும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) கொழும்பு வித்தியா மாவத்தையில் உள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான வெஸ்ட்மின்ஸ்டர் இல்லத்தில் இடம்பெற்றது.
“இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடி, அரசியல் நிலைமை மற்றும் தேசிய மக்கள் சக்தியின் இன் கொள்கைகள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இந்த சந்திப்பில் தேசிய பொதுஜன பெரமுனவின் தேசிய செயற்குழு உறுப்பினர் விஜித ஹேரத்தும் கலந்துகொண்டார்.